கர்ப்ப காலத்தில் உடல் உறவு கொள்ளலாம், ஆனால் அதற்கு பொறுமை வேண்டும்.
எல்லோருக்கும் இந்த மாதிரியான சந்தேகங்கள் இருக்கும். இதற்கு காலத்தில் உடலுறவு மேற்கொள்வது நல்லதா கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம், பொறுமை வேண்டும் அதை வள்ளுவர் கூறிஉள்ளர்.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
இதற்கு பொருள் விழியால் பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் முகர்ந்து, உடம்பால் தீண்டி என ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு. மனதால் இணைய வேண்டும், உடல் பின்பே இணைய வேண்டும் என்கிறார்.
கர்ப்பம் தரித்து ஐந்து மாதம் வரை மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். இந்த மூன்று மாதம் வரை எந்த ஒரு சமயத்திலும் உடலுறவு கூடாது என்கிறார்கள்.
பிறகு அடுத்த 5 மாதம் முதல் 8 மாதம் வரை வயிற்றை அழுத்தாமல் குலுங்காத வகையில் உடலுறவு மேற்கொள்ளலாம். வாரம் இரண்டு முறை செய்யலாம் என்று சொல்கிறார்கள்.
இந்த ஐந்து முதல் 8 மாதம் வரை உடலுறவு கொள்வதன் மூலம் பிரசவத்தினால் ஏற்படும் மன அழுத்தம் பெண்களுக்கு குறைகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் பிறப்புறுப்பு தளர்ந்து சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கிறது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் கட்டாயம் நிறைமாத கர்ப்பத்தில் உடலுறவு கூடவே கூடாது என்று சொல்லப்படுகிறது.
நிறைமாத கர்ப்பத்தில் உடலுறவு கொள்ளும் போது பிரசவதிற்கு முன்பே பனிக்கூடம் உடையும் நிலை ஏற்படும், அதனால் அறுவை சிகிச்சை தான் நடைபெறும், இதனால் நிறைமாத கர்ப்பத்தில் உடலுறவு கொள்வதை தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.