கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்-க்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
174
Corona infection confirmed for cricket superstar! Shocked fans!
Corona infection confirmed for cricket superstar! Shocked fans!

கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்-க்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றானது ஓராண்டு கலத்தைக் கடந்து தற்போது இந்த வருடமும் 2 வது, 3 வது அலையாக கொரோனா தொற்று கோரதாண்டவம் எடுத்து ஆடுகிறது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பீதியடைந்துள்ளது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கபட்டு போட்டு வந்தாலும் இந்த தொற்று ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டு தான் வருகிறது.பல அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி உள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இந்தியா கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் 4 வது இடத்திலிருந்து 3-வது  இடத்திற்கு முன்னேறி உள்ளது.அதிலும் முக்கியமாக மகாராஷ்டிரா,கேரளா,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகாமாக உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் இழப்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.மேலும் சச்சின் டெண்டுல்கர் தன்னை வீட்டினுள்ளே தனிமை படுத்திக் கொண்டதாகவும்,அவர் குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்றானது பரவவில்லை தனுக்கு மட்டும் தான் கொரோனா தொற்று உள்ளதாகவும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரவித்துள்ளார்.மேலும் இலங்கைக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் இந்திய கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார் என்பது குறுப்பிட தக்கது.மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Previous articleஷகிலா-வின் புதிய தோற்றம்!! என் ஆட்டம் இனிதான் ஆரம்பிக்க போகுது!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!  
Next articleநாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது!! கவலையில் பொதுமக்கள்!!