ஷகிலா-வின் புதிய தோற்றம்!! என் ஆட்டம் இனிதான் ஆரம்பிக்க போகுது!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!  

0
80
Shakila's new look !! My game is about to start !! Happy fans !!
Shakila's new look !! My game is about to start !! Happy fans !!

ஷகிலா-வின் புதிய தோற்றம்!! என் ஆட்டம் இனிதான் ஆரம்பிக்க போகுது!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

சினிமாவில் பிரபலமாக இருந்த பல நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டனர். எம்ஜிஆர், ஜெயலலித்தா, விஜயகாந்த், சரத்குமார், குஷ்பு,  கமல், கருணாஸ், உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் அரசியலில் உள்ளனர் அந்த வகையில். தற்போது ஷகிலாவும் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பல திரைப்படங்களில் நடித்து தனது ரசிகர்களின் மனதில் நீங்காது இடம்பிடித்துள்ளார்

. சமயத்தில் விஜய் தொலைக்காட்சி ஒல்லிப்பரப்பு செய்த குக்கு வித் கோமாளி என்ற எண்டர்டெயின்மென்ட் சமையல் நிகழ்ச்சியில் காலத்து கொண்டு மேலும் பிரபலமானார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு மனித உரிமை துறை பொதுச் செயலளார் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால் தான் நான் அந்த இடத்தை நிரபப்புவதற்காக வந்துனேன் என்று கேட்கிறார்கள் குஷ்பு எனக்கு சீனியர் அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம்.

அவர் இந்த கட்சியிலிருந்து விலகியதற்கு ஒரு காரணம் உள்ளது. மேலும் பெண்களுக்கு நல்லது செயும் நோக்கத்தில் தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நல்லது செய்ய கூட ஒரு பவர் வேண்டும் நடிகையை தாண்டி எனக்கு  தனி அடையாளம்  மற்றும் தனி அதிகாரம் பெற விரும்புகிறேன் என்று கூறினார். நாடு முழுவதும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனை தான் விதிக்க வேண்டும். நான் இபோதுதான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன் “இந்தான் என் ஆட்டத்த பாக்க போறீங்க”. ஆரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமாவில் என் பயணம் தொடரும் என்றார்.

author avatar
CineDesk