திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த அறிவிப்பை திமுக தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி மகளிர் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். விரைவில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்றும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.