குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? 

0
271

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்?

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். திமுக அரசு வெற்றி பெற்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் குடும்ப தலைவிக்கு ரூ.1000 திட்டம் நிறைவேற்றாமல் இருந்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை என குற்றம்சாற்றியுள்ளார். ஆதலால் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியி படி,  மாதம்தோறும் குடும்ப தலைவிக்கு ரூ.1000  உரிமைத்தொகை வழங்கப்பட்டும் என அறிவித்தார். 2022- 23-ம் ஆண்டுக்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதாக நிதிநிலையில் தேவையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என அறிவித்தனர். தமிழகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.ஆதலால், தமிழக அரசு கணக்கெடுப்பு பணி நடைபெறும். அப்பணி முடித்ததும் இத்திட்டம் செயல்படுதபடும் என அறிவித்தார்.PHH, PHH-AAY, NPHH ஆகிய குறியீடுகள் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கப்படும். மேலும் NPHH-S, NPHH-NC  இந்த வகை ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படாது என அறிவித்தார்.

 

Previous articleஅரசின் அம்மா சிமெண்ட் விற்பனை செய்ததில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்!
Next articleஇந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!