அரசின் அம்மா சிமெண்ட் விற்பனை செய்ததில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்!

0
164

அரசின் அம்மா சிமெண்ட் விற்பனையில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்!

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு உள்ளே அம்மா சிமெண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது.இதற்கு பொறுப்பாளராக ஊராட்சிஒன்றிய மேலாளர் மற்றும் விற்பனை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விற்பனை மேலாளர் சிவகுமார் ஆகிய இருவரும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு ஒருமுறை முதல் தவணையாக 250 அம்மா சிமெண்ட் வழங்க அரசு உத்தர விட்டுள்ளது. மேலும் முதலில் பதிவு செய்யப்பட்ட பொது மக்களுக்கு அம்மா சிமெண்ட் வழங்குவதில்லை.அதற்கு மாறாக சிமெண்ட் மூட்டைக்கு அதிக லாபத்தில் தனியார் வியாபாரிகள் மூலம் கான்ட்ராக்ட் காரர்கள் முறைகேடாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அம்மா சிமெண்ட் மூட்டை வேண்டுமென்று பதிவு செய்தும் இன்னும் வரவில்லை என அலுவலகத்தில் நேரடியாக சென்று கேட்டு வருகின்றனர்.அப்பொழுது இன்னும் உங்களது பெயரில் அம்மா சிமெண்ட் வரவில்லை என விற்பனைப் பிரிவு மேலாளர் பதில் தெரிவிக்கிறார். இதனால் பொதுமக்கள் அம்மா சிமெண்ட் கிடைக்கவில்லை என , கட்டிடப் பணிகளை பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.இது தேனி மாவட்டம் முழுவதும் அம்மா சிமெண்ட் தட்டுப்பாடாக உள்ளது. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விரைவில் அம்மா சிமெண்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பம் பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.