கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைக்கு கூட தீர்வை தரும்! இந்த பரிகாரம்!

Photo of author

By Kowsalya

உங்கள் வீட்டில் மிகவும் கொழுந்துவிட்டும் எரியும் பிரச்சனைக்கு கூட இந்த பரிகாரம் செய்தால் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் .

 

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து வரும் பொழுது பெரிய நஷ்டம் கூட உங்களுக்கு லாபமாக மாறும். லாபம் என்பது வெறும் பணம் காசு இழப்பது மட்டுமல்ல உங்கள் வீட்டில் நஷ்டம் ஆரோக்கியத்தில் நஷ்டம் தொடரில் நஷ்டம் யாராவது இறப்பது ஆகியவை அனைத்தும் நஷ்டத்தையே சேரும்.

 

கண் திருஷ்டியில் வருவது கூட ஒரு நஷ்ட கணக்கு தான். இப்படி பலவிதமான துன்பங்களிலிருந்து நம்மை பாதுகாக்க போகும் ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

 

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் ஒரு கொப்பரை தேங்காய் . ஹோமங்களில் எல்லாம் போட பயன்படுத்தும் கொப்பரை காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் பெரிய பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும்

 

.வெண்கடுகு 1 கைப்பிடி,

1 கட்டி கற்பூரம். மெழுகு கற்பூரம் வாங்கக்கூடாது.

சூடம் என்று சொல்லப்படும் கட்டி கற்பூரத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

 தேங்காயின் மேல் பக்கத்தில் சிறிய அளவில் ஓட்டை போட்டுக் கொண்டால் போதும்.

அந்த ஓட்டையில் இந்த வெண்கடுகை போட வேண்டும்.

அந்த ஓட்டையில், தேங்காய்க்கு உள்ளே வெண்கடுகை போட்டுவிட்டு, அதன் உள்ளே கற்பூரத்தை வைத்து கொளுத்தி விட வேண்டும். இதை நம்மால் வெறும் கையால் வைத்துக்கொண்டு சுற்ற முடியாது அதனால் வீட்டில் எச்சில் படாத தட்டில் இந்த கொப்பரை தேங்காய் வைத்து எரிய விட வேண்டும்.

 

 தட்டின் மீதும் இந்த கொப்பரை தேங்காய் வைத்து கற்பூரம் ஏற்றி நெருப்புமூட்டி விடுங்கள். உள்ளே இருக்கும் வெண்கடுகு எரிய தொடங்கும் . இந்த கொப்பரை தேங்காய் எறிவது தான் பரிகாரம்.

 

இந்த நெருப்பை நீங்கள் எங்கு திருஷ்டி கழிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அங்கு எரியவிட்ட திருஷ்டி கழித்துக் கொள்ளலாம்.  தொழில் செய்யும் இடத்தில் வாசலுக்கு வெளியே வைத்து இதை அப்படியே கொழுந்து விட்டு எரிய விட்டு விட வேண்டும்.

 

அலுவலகம் கடை தொழிற்சாலை எதுவாக இருந்தாலும் அந்த இடத்தில் இந்த சின்ன பரிகாரத்தை செய்தால் கண் திருஷ்டி நீங்கி உங்களுக்கு வந்த நஷ்டம் அனைத்தும் லாபமாக மாறும்.

 

நீண்ட நாட்களாக ஒருவர் தினம் தினம் மருந்து சாப்பிட்டுக் கொண்டு தீராத நோயால் அவதிப்பட்டு வருகிறார் என்றால், அவருக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

 

 இப்படி அதிக நாள் நோயில் இருப்பவர்களை கிழக்கே பார்த்து உட்கார வைத்து இந்த கொப்பரை தேங்காய் எரியவிட்ட திருஷ்டி கலைத்த வீட்டின் முன் எரிய விட வேண்டும்.

 

 சில சிறிய குழந்தைகள் வெளியில் சென்று வந்தால் எதையோ கண்டு பயந்து அலறி அழும். இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரத்தை எதற்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். கொப்பரை தேங்காயில் வெண்கடுகு போட்டு கற்பூரம் வைத்து கொளுத்தி இந்த நெருப்பை திருஷ்டி கழிக்க சுற்ற வேண்டும்.

 

 வந்த நஷ்டத்தினை லாபமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. வர போகும் நஷ்டத்தை தடுத்து நிறுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.