கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Parthipan K

Tamil Nadu government orders holiday for Kumari district

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களில் ஒன்றான திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து கும்பாபிஷேக திருவிழா கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி சில பூஜைகளுடன்தொடங்கியது.முதலில் கணபதி ஹோமம் பூஜை தொடக்கி  அடுத்தடுத்து  சில முக்கியமான  பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவிற்கு கேரளா,தமிழகத்தில் இருந்த கோடான கோடி பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில்  ஜூலை ஆறாம் தேதி அன்று அதிகாலை ஐந்து 15 மணி அளவில் இருந்து ஆறு ஐம்பது மணிக்குள் கும்பாபிஷேக திருவிழா நடைபெறும் என பக்தர்கள் அனைவருக்கும்  தெரிவுபடுத்தியது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க இருக்கின்றார்கள்.

இத்திருவிழா காரணமாக குமரி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்குமாறு பக்தர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நாளை 6.7.2022 அன்று மாநில அரசுகள் மற்றும் அலுவலகங்கள், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை தொடர்ந்து அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றார்கள். இதேபோல் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் காவல்துறையினர் பாதுகாப்பில் பணியாமத்துகின்றனர். பக்தர்களின் வருகையையொட்டி அவர்களுக்கு வாகனம் நிறுத்தும் பகுதியையும் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தயார் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால் பக்த கோடிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.