கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு 4கிராம் தங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு 1 பவுன் தங்கம் மற்றும் 50,000 ரொக்க பணம் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். அவரது மறைவிற்கு பின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியும் அந்த திட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் இந்த திட்டத்தை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு அரசு சார்பில் 4கிராம் தங்கம் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்த சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்குகான தங்கம் வழங்கும் திட்டம் குறித்து அரசின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களில் திருமணம் செய்யும் அவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் என இந்த சமய அறநிலைய துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.