சற்றுமுன்: மருந்து சீட்டுகளில் இந்த லெட்டரில் தான் எழுத வேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
மக்கள் பலரும் தங்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றவுடன் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு செல்லும் பொழுது குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் மீது புகார்கள் வருவதும் உண்டு.அதனை காட்டிலும் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளின் பெயர்களே புரியாத வகையில் இருப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.இவ்வாறு மருத்துவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் மருந்து எடுத்து தருபவர்களுக்கும் ஒரு சில நேரம் புரிவதில்லை.
இதனையெல்லாம் தடுக்கத்தான் மருத்துவ கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில்,மருத்துவர்கள் அனைவரும் மக்களுக்கு புரியும்படி மருந்துகளின் பெயர்களை எழுத வேண்டும் என்று கூறியது.ஆனால் இதனை பெரும்பாலான மருத்துவர்கள் கடைபிடிப்பது இல்லை.இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் மக்களுக்கும் புரியும் படியான கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் பலமுறை கூறியும் மருத்துவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. மருத்துவரின் கையெழுத்து புரியவில்லை என்பது குறித்த புகார்களும் அவ்வபோது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இதனால் மருந்து மாத்திரைகளை தவறாக வாங்கி உட்கொள்ளும் நிகழ்வுகளும் உள்ளது.
இதனையெல்லாம் தடுக்க தான் தற்போது தமிழக அரசும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.இனி தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் அனைவரும் கட்டாயம் கேப்பிட்டல் லெட்டரில் தான் மருந்துகளை எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி இனி வரும் நாட்களில் மருத்துவர்கள் அனைவருக்கும் புரியும் படியான கேப்பிட்டல் லெட்டரில் மருந்துகளை எழுதுவர் என்பதை எதிர்பார்க்கலாம்.இதன் மூலம் மருத்துவர்களின் கையெழுத்தின் மேல் வரும் புகார்கள் சற்று குறைய நேரிடும்.