சிஎஸ்எப் காவல் அதிகாரிக்கு கங்கனா-வின் ரிவெஞ்!! 3 பிரிவுகள் கீழ் வழக்கு அடுத்து கைது.. பஞ்சாப்பில் தொடர் பரபரப்பு!!

0
364
Kangana's revenge on the CSF police officer!
Kangana's revenge on the CSF police officer!

சிஎஸ்எப் காவல் அதிகாரிக்கு கங்கனா-வின் ரிவெஞ்!! 3 பிரிவுகள் கீழ் வழக்கு அடுத்து கைது.. பஞ்சாப்பில் தொடர் பரபரப்பு!!

கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியதை அடுத்து நேற்று டெல்லி செல்ல சண்டிகர்  விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கிருந்த சிஎஸ்எப் பெண் காவலர் எதிர்பாராத வகையில் கங்கனா ரனாவத்தை  திடீரென்று கன்னத்தில் அறைந்தார்.இந்த வீடியோவானது இணையதளம் மூலம்  தீயாக பரவியது.மேற்கொண்டு தான் அறைந்ததர்கான காரணத்தையும் அந்த சிஎஸ்எப் அதிகாரி கூறியிருந்தார்.கடந்த வருடம் விவசாயிகள் டெல்லியில் போராடிக் கொண்டிருந்த பொழுது கங்கனா, விவசாயிகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில்  அவதூறாக பதிவிட்டிருந்தார்.

அதில், ரூபாய் 100க்கும் 200க்கும் இந்த விவசாயிகள் போராட்டம் என்ற நாடகத்தை நடத்துகின்றனர்.விவசாயிகள் அனைவரும் பயங்கரவாதிகள் என தெரிவித்திருந்தார். இந்த போராட்டத்தில் தற்பொழுது அறைந்த சிஎஸ்எப் அதிகாரியின் தாயும் இருந்துள்ளார்.தனது தாயை இப்படி கொச்சையாக விமர்சிப்பதா என்று கூறி அந்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் அறைந்துள்ளேன் என்ற காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து தமிழ் சினிமா இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் உள்ளிட்டோர் பலரும் அந்த காவல் அதிகாரிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த சிஎஸ்எப் அதிகாரியை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ததுடன் ஐபிசி பிரிவுகள் கீழ் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி மேற்கொண்டு இது குறித்து கங்கனா கூறுகையில் கூட, பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.மேலும் இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அதுமட்டுமின்றி கங்கனா, இந்த சி எஸ் எஃப் அதிகாரியை பணியிலிருந்து நீக்கம் செய்ய பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.