சிறுநீரகம் முதல் இதய பிரச்சனை வரை.. இது தெரிந்தால் கட்டாயம் இனி திராட்சை விதையை துப்ப மாட்டீர்கள்!!

Photo of author

By Rupa

சிறுநீரகம் முதல் இதய பிரச்சனை வரை.. இது தெரிந்தால் கட்டாயம் இனி திராட்சை விதையை துப்ப மாட்டீர்கள்!!

Rupa

 

கண்ணை பறிக்கும் நிறத்தில் கோலிக்குண்டு போன்று கொத்து கொத்தாக உள்ள திராட்சை பழத்தை விரும்பாதவர் யாரும் இல்லை.கருப்பு மற்றும் பச்சை என இரு நிறங்களில் விளையும் திராட்சையில் கருப்பு நிற பன்னீர் பழத்தை தான் பலரும் விரும்புகின்றனர்.

திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.திராட்சை பழத்தை ஜூஸாக செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும்.

பொதுவாக திராட்சை பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் விதையை நீக்கிவிடுவது வழக்கம்.சிலர் விதையில்லா திராட்சை பழத்தை சாப்பிட விரும்புகின்றனர்.ஆனால் அதன் விதையில் மறைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள் தெரிந்தால் இனி அதை தூக்கி வீச மாட்டீங்க.

திராட்சை விதையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.திராட்சை விதையை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் மேம்படும்.

இரத்த அழுத்தம்,இதய நோய் போன்ற அபாயங்களை திராட்சை விதை குறைக்கும்.திராட்சையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.

திராட்சை விதையை பொடித்து வெந்நீரில் கலந்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.இரத்த குழாயில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பட திராட்சை விதை நீர் பருகலாம்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு ஸ்பூன் திராட்சை விதை பொடி சாப்பிட வேண்டும்.திராட்சை விதை பொடியை சூடான பாலில் கலந்து பருகி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.தொடர்ந்து திராட்சை விதைப் பொடி சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும்.திராட்சை விதை நீர் அருந்தி வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி கட்டுப்படும்.