செம சான்ஸ்! மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகத்தை படிப்பது மட்டுமல்லாமல் தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டியினை நடத்துகின்றார்கள். கவிதை, பேச்சுப் போட்டி, ஓவியம், விளையாட்டு மற்றும் நடனம் ஆகியவற்றில் தனது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தலாம். இதில் தமிழக அரசு ,பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். மாணவர்களே தங்கள் திறமையை வெளிப்படுத்த இது ஒரு அரிய வாய்ப்பாகும். மாணவர்களுக்காக நடைபெறும் செஸ் போட்டியின் நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளனர்.
செஸ் போட்டியை நடத்த உடற்கல்வி ஆசிரியருக்கு ஜூலை 2ஆம் தேதிக்குள் புத்தக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஜூலை 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை செஸ் போட்டியை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண அழைத்து செல்லப்படும். அதுமட்டுமின்றி செஸ் வீரர்களுடன் கலந்து உரையாட ஏற்பாடுகளும் செய்யப்படும்.