ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர்மல்க மரியாதை செலுத்திய சசிகலா.!!

0
217

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்பின், இவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த உரையாடலில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேசுகையில் அதிமுகவை தலைமை ஏற்க வருமாறு தெரிவிக்கின்றனர். சசிகலாவும் விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அதிமுக பொன்விழா நாளை பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தபின் 4 ஆண்டுகள், 8 மாதங்களுக்கு பின் சென்னை தி.நகர் வீட்டிலிருந்து அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்டு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர்மல்க மரியாதை செலுத்திய சசிகலா.!!

இந்நிலையில், தற்போது மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தி உள்ளார். தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். மேலும் நாளை அதிமுக சார்பில் பொன் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சசிகலா மரியாதை செலுத்தி உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஒரே நாளில் 400 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!
Next articleசசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here