டபுள் செஞ்சுரி போட்ட கிரிக்கெட் வீரர்! செஞ்சுரியில் மரணம்!

Photo of author

By Parthipan K

முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது 100 வது வயதில் இன்று காலமானார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான வசந்த் ரைஜி என்பவர் தனது 100வது வயதில் இன்று காலமானார். இவரது இறப்பிற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ பிரபல கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1939ம் ஆண்டு கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா சிசிஐ என்ற அணிக்காக விளையாடிய அவர், முதல் தரப் போட்டிகளில் 277 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர்களுக்கு அவ்வபோது சிறந்த ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.