தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! பெண்களுக்கான இலவசபேருந்து இளஞ்சிவப்பு நிற மாற்றம்!
பெண்களுக்கான இளஞ்சிவப்பு பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து விமர்சனத்திற்குள்ளான அரசு மாநகர பேருந்துகளை முழுமையாக இளஞ்சிவப்பு நிறமாக போக்குவரத்துக் கழகம் மாற்றியுள்ளது. இதையடுத்து மகளிருக்கான இலவச பேருந்து முழுவதையும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது. பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தில் முன்புறம் மட்டும் இளஞ்சிவப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டன.
இந்த இளஞ்சிவப்பு நிற பேருந்துகளின் சேவையை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் தொடங்கிவைத்தார். பேருந்தில் முன்புறம் மட்டும் இளஞ்சிவப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
முதல்கட்டமாக மூன்று பேருந்துகள் முழுமையாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் முழுமையாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் 1559 சாதாரண கட்டண பேருந்துகளும் முழுவதுமாக இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட உள்ளது.