தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற வேண்டுமா? 

0
206
Should Tamil Nadu Minority Economic Development Corporation take loan?
Should Tamil Nadu Minority Economic Development Corporation take loan?
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற வேண்டுமா?
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் (TAMCO) மூலம்
கடனுதவி வழங்கும் திட்டம்.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுய குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டங்களான உதவி கடன் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/- க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வி திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக
ரூ.20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும்
அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு
ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/-
வரை கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரு.1,00,000/-
ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை/முதுகலைதொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி
பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மற்றும் மாணவியர்களுக்கு 5% வட்டி
விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
நிலையங்களில் எனவே, தேனி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவுபங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த
விவரம்/திட்டஅறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக
இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள்
சமர்ப்பிக்கப்படவேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ்,
உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/செலான்
மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க
வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன்கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்துபயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்துள்ளார்.
Previous articleகடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது!
Next articleபோடி -மீனாட்சிபுரம் அருகே ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து அஇஅதிமுகவினர் கூட்டம்!