கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது!

0
88
Police arrested 3 people from the smuggling gang!
Police arrested 3 people from the smuggling gang!

கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது!

ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்தவர் மூலாராம் வயது 52 .இவர் குடும்பத்துடன் சேர்ந்து சேலம் பட்டை கோவில் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவருடைய மகன் ஜெயராம் வயது 22. இவர் தனது சின்னக்கடை வீதியில் வசதிக்கேற்ப மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் இரண்டாம் தேதி ஜெயராம் கடையில் தனியாக இருந்த போது அங்கு வந்த நாலு பேர் அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை மூலாராம் அருகே உள்ள சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இது குறித்து மூலாராம் சேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். தனது மகனை நான்கு பேர் காரில் கடத்திச் சென்றதாக கூறினார். இதுபோன்ற கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் உதவி கமிஷனர்கள் அசோகன், வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறது. இந்த நிலையில் ஜெயராமன் மல்லிகை கடயை சோதனை செய்தனர். சோதனை நடத்திய போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்த கடத்தல் கும்பல் ஜெயராமை பெங்களூரில் வீட்டு சென்றனர். இதனை அறிந்த தனிப்படை போலீசார் மீட்டு சேலத்துக்கு அழைத்து வந்தனர்.  பின்னர் பின்னர் தீவிரமாக விசாரித்த போது புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து மூலாராம், ஜெயராம் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூருவில் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த பாகாராம்(30),பிரகாஷ்(30),தினேஷ்(29) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் மூவரையும் சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் விசாரணையின் போது இவர்கள் மூன்று பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் தலைமுறைவாக உள்ள ஒருவரை தேடி வருகிறார்கள்.

போலீசார் விசாரின் போது, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து கொடுக்கும் போது அதற்காக பணத்தை மூலாராம் கொடுத்து உள்ளார். கடந்த சில நாட்களாக பணம் கொடுக்காமல் இருந்த அவரிடம் பலமுறை பணத்தை கேட்டு உள்ளனர். ஆனால் மூலாராம் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் கடையில் தனியாக இருந்த ஜெயராமை கடத்திச் சென்று அவரது தந்தையிடம் பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனதாக கூறினர்கள்.

author avatar
CineDesk