தமிழ்நாட்டில் எலிகள் கூட இவற்றை தேடி காவல் நிலையத்துக்கு வருகிறது!! கவர்னர் கேள்வி!!
தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் வைக்கபடும் கஞ்சாவிற்கு பாதுகாப்பு இல்லை என கவர்னர் கேள்வி எழுப்பினார்.
கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக கூறி சப்-இன்ஷ்பெக்டர் சாட்சி கூறியதால் கஞ்சா வழக்கில் கைதான இருவரையும்சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான வக்கீல் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவிற்கும், போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்ட கஞ்சாவின் எடையின் அளவில் மாறுபாடு உள்ளது. இந்த வேறுபாடானது போலீசாரின் உண்மைத்தன்மையில் பெரியதொரு சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் போனதால் குற்றவாளிகள் என கருதப் பட்ட இருவரையும் விடுதலை செய்யுமாறு வாதாடினார்.
இதை ஏற்ற நீதிபதி போலீசாரின் விசாரணையில் மிகுந்த சந்தேகம் இருப்பதோடு மட்டுமில்லாமல் கைது செய்யப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டினை போலீசார் சரிவர நிரூபிக்கவில்லை. எனவே கைதான இருவரையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கைப் பற்றி கேள்வி பட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட கஞ்சாவிற்கு யார் பொறுப்பு?? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவைத் தேடி காவல் நிலையம் வருகின்றன. அவை கஞ்சாவை தின்று விடுவதால் போலீசார் குறைந்த அளவு கஞ்சாவையே நீதிமன்றத்தில் சமர்பித்து உள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள கஞ்சாவை எலிகளிடமிருந்து காப்பாற்ற யார் பாதுகாப்பு?? கஞ்சா வழக்கில் இருவர் தப்பித்து விட்டனர். எலிகளை திருட வேண்டாம் என எப்படி திருத்துவது?? அவைகளின் போதை பழக்கத்தினை எப்படி தடுப்பது என அவர் கேள்வி எழுப்பினார்.