தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா?

0
271

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் ராஜகோபுரம் அதன் நிழலை தலைகீழாக பிரதிபலிக்கும் நுட்பத்தின் அதிசயம் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 

ஒரு பொருளோ, கட்டிடமோ, நபரோ , அதன் அதன் நிழலை அப்படியே பிரதிபலிக்கும். அதற்கு பெயர் தான் நாம் நிழல் என்று சொல்லுவோம். ஆனால் இங்கு கதையே வேறு. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுகிறது.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற பகுதியில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை சாளுக்யா, கொய்சலா வம்சத்தினர் கட்டியதாக கூறப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த ஆலயத்தில் ஏராளமான திருப்பணிகள் நடந்து இருக்கிறது என குறிப்புகள் சொல்கின்றன.

 

கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இது எப்படி என்பதுதான் விஞ்ஞானர்களே புரியாத புதிராக இருக்கிறது. ஒரு பொருளின் நிழல் தலைகீழாக தெரிய வேண்டும் என்றால் நிஜத்துக்கும், நிழலுக்கும் இடையே கண்ணாடி போல் ஏதோ இருக்க வேண்டும். இங்கே அப்படி எதுவுமே இல்லாத நிலையில் இது எப்படி நடக்கிறது என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா? தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா? தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா?

அந்த காலத்தில் தொழில் நுட்பத்தின் எல்லை என்னவென்று இதன் மூலம் நமக்கு தெரிந்திருக்கும். இது எப்படி தன் நிழலை தலைகீழாக பிரதிபலிக்கிறது என்று இதுவரை எந்த விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை.

 

இந்த கோயிலில் இன்னும் பல ஆச்சர்யங்கள் உடன் இந்தக்கோயில் அமைந்துள்ளது. கோயில் மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளது. இங்குள்ள மற்றொரு மண்டபத்தின் நடுவே வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்ரா ஆறின் நீர் மடப்பள்ளியை அடைத்து பின்னர் வெளிப்பிரகாரம் வழியே வெளியேறுகிறது.

 

1565ல் நடந்த போரில் இந்த நகரே அழிந்துவிட்டது. ஆனால் இந்த கோயில் மட்டும் இன்னும்கூட கம்பீரத்தோடும், ஏராளமான ஆச்சர்யங்களோடும் காட்சியளிக்கிறது.

 

 

 

Previous articleஇந்த ராசிக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும்! இன்றைய ராசி பலன் 14-06-2021 Today Rasi Palan 14-06-2021
Next articleஇந்த உண்மை தெரிந்தால் நிச்சயம் இதனை சாப்பிடமாட்டீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here