இந்த உண்மை தெரிந்தால் நிச்சயம் இதனை சாப்பிடமாட்டீர்கள்!

0
64

உலகிலேயே மிக விலை உயர்ந்த காபியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதை ருசித்துப் பார்த்துள்ளீர்களா?

 

உலகத்தின் விலையுர்ந்த இந்த காபியை லுவாக் காபி அல்லது சிவெட் காபி என்று கூறுவார்கள்.

 

இதை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

 

இது இப்போது நம் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பதப்படுத்தப்பட்ட இந்த காபியின் விலை 1 கிலோவுக்கு ரூபாய் 20 ,000 முதல் 25 ,000 வரை நிர்ணயித்து சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு பெரிய அளவில் இதனை ஏற்றுமதி செய்கிறார்கள்.

 

இந்த காபியை வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டிப்பாக வாங்கி சுவைத்து பாருங்கள்.ஏனென்றால் இது எந்த இடத்தில் இருந்து உருவாகிறது என்று கேட்டால் மிகவும் பூரித்து போவீர்கள்.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க்கில் உள்ள காபி தோட்டங்களில் சிவெட் என்ற வகை பூனைகள் வாழ்கின்றது.இந்த பூனைகள் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமான உருவமைப்பு கொண்டதாக இருக்கும்.

 

இந்த காபியை தயாரிக்கும் முறையின் முதல் படியாக காபி தோட்டத்திலிருந்து பழுத்த சிறந்த காபி பெர்ரிகளை இந்த பூனைக்கு உணவாக கொடுக்கிறார்கள்.இதை சாப்பிட்ட பூனைகள் சில மணி நேரங்களில் செரிமானம் ஆகி வயிற்றிலிருந்து பீன்ஸ் போன்ற வடிவத்தில் அதன் கழிவை வெளியேற்றுகிறது.இந்த கழிவை பத்திரமாக எடுத்து பாதுகாத்து பின் பதப்படுத்தி காபியாக மாற்றுகிறார்கள்.”

இந்த பூனைகளின் வயிற்றில் உள்ள இயற்கை என்சைம்கள் கழிவாக வரும் பீன்னின் சுவையை மேம்படுத்துகின்றன, அதனால்தான் இந்த காபி தனித்துவமாகவும் சுவையானதாகவும் விளங்குகிறது.

 

காபி பிரியர்கள் யாராவது இந்த காபியை குடித்திருந்தால் இதன் ருசி எப்படி இருக்கும் என்று உங்களின் கருத்துக்களை பகிருங்கள்.

 

கேட்கவே சகிக்கவில்லை எப்படி இதை கொடுக்கிறார்களோ என்றுதான் கவலையாக உள்ளது.

 

author avatar
Kowsalya