திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை!

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அதிகாலை மூன்றரை மணி அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் மக்கள் அனைவரும் கதி கலங்கினர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். நகரத்தின் புறநகரில் உள்ள சுரங்கத்தில் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 15 நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டதாக கூறியுள்ளனர்.

அவர்களை மீட்பதற்கு மீட்பு பணிகளும் தொடர்ந்து போராடி வருவதாகவும் கூறினர்.ஹர்னாய் மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு உள்ள நடைபாதை சாலைகள் பாதிப்படைந்துள்ளது.மேலும் அங்கு மின்சாரம் இல்லாததாலும் மீட்பு பணி செயல்படுவதற்கு சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்து அதிக அளவு சேதமடைந்துள்ளது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்தோடு 200க்கும் மேற்பட்டோர் பெருமளவு காயமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த உயிரிழந்த 20 பேரில் ஒரு பெண்ணும் ஆறு குழந்தைகள் என்றும் தற்சமய தகவலாக தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த 200 பேரில் பெரும்பான்மையோருக்கு கை கால்கள் முடிந்ததாகக் கூறியுள்ளனர். 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்ட நிலநடுக்க ரிக்டர் அளவானது 7.5 ஆகும். இந்த நிலநடுக்கத்தால் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். அதேபோல 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பொழுது 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி 3.5 மில்லியன் மக்கள் குடியிருப்புகளை இழந்து தவித்தனர். தற்பொழுது ஏற்பட்டுள்ள ரிட்டர்ன் அளவு முன்பை காட்டிலும் சற்று குறைவாக இருந்தாலும் அதன் பாதிப்பானது அதிகமாகவே காணப்படுகிறது.

Leave a Comment