ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள்.!! எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்கள்.!!

0
221

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து துறை சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல ஆயுதபூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் அக்டோபர் 12 ,13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை மற்றும் பண்ருட்டி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து ஆரணி, ஆற்காடு, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன.

ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள்.!! எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்கள்.!!

மேலும், புதுச்சேரி கடலூர் சிதம்பரம் வழியாக செல்லும் பேருந்துகள், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை கழகம் அறிவித்துள்ளது.

Previous articleதிடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை!
Next articleசேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here