திமுகவிற்கு துரோகம் இழைத்த முக்கிய கூட்டணி கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
73

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து திமுக விற்கும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மன வருத்தம் இருந்து வருகிறது.அதோடு கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக ஒரு சில செயல்பாடுகளில் திமுக ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சுயேட்சையாக நின்றதால் அந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாதிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கிருஷ்ணகிரியை சார்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் திமுகவிற்கு எதிராக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்சமயம் சில சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகளை திமுக தருவதற்கு தயாராக இல்லை காரணம் அந்தக் கட்சி தமிழகத்திலே பெரிய அளவிற்கு செல்வாக்கு இல்லாத கட்சி என்ற காரணத்தால், திமுக காங்கிரஸ் கட்சியை கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதற்கு தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியாக அந்த கட்சிக்கு திமுக சார்பாக 25 தொகுதிகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் திமுக கூட்டணியில் அதிக சீட்டுகள் வாங்கியதே காங்கிரஸ் கட்சி தான் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் ஒரு வேளை எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்தால் அதற்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்ற பிம்பம் உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.அதோடு தற்சமயம் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய முருகன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு இந்த தேர்தலில் திமுகவின் வேட்பாளர் முருகனுக்கு எங்களுடைய ஆதரவு இல்லை என ஒன்று கூடி முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கல்யாணி, சூளகிரி கிழக்கு ஒன்றிய நிர்வாகி வட்டார தலைவர்கள் நாகராஜ், ராமமூர்த்தி, இரவிச்சந்திரன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்ற தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் எல்லோரும் உள்ளாட்சித் தேர்தல் நடந்த சமயத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நமக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுகவினர் சுயேச்சையாக போட்டியிட்டு நம்முடைய வெற்றியை பறித்து விட்டார்கள். ஆகவே இந்த தேர்தலில் அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்ததாக தெரிகிறது.

அதோடு வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரச்சாரம் செய்வது போன்ற எந்த ஒரு விஷயத்திலும் நாம் பங்கேற்க கூடாது. அவர்களுக்கு ஆதரவும் கொடுக்க கூடாது என முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் திமுக தலைமை மற்றும் காங்கிரஸ் தலைமை இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அதோடு சென்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக நின்றதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையில் திமுகவினர் வீடியோ யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.