சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்ட ரவுடி! ஓட ஓட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

0
1001
சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்டே ரவுடி! ஓட ஓடிட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!
CHENNAI ROWDY

வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் கடைக்காரரை மிரட்டி மாமு கேட்ட இளைஞரை பிடித்து, வணிகர்களே போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

பொதுவாக தமிழ் சினிமாக்களில் ரவுடிகள் கடை மற்றும் தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த காட்சிகள் அமைக்கப்படுகிறது. அப்போது, இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஒருவன் வரமாட்டானா என்று ஒருவர் வசனம் பேசுவார். அந்நேரம் ஹீரோ ஹீரோ என்ட்ரி கொடுத்து, ரவுடிகளை அடித்து தொம்சம் செய்வார்.

ஆனால், சென்னையில் மாமூல் கேட்டு ரகலையில் ஈடுபட்ட ரவுடியை வணிகர்களே விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சிங்காரத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

சம்பவம் நடந்த நேற்று இரவு அந்த கடைக்கு வந்த மது போதையில் வந்த இளைஞர் ஒருவர், 4 ஜீன்ஸ் பேண்ட்களை வாங்கியுள்ளார். வாங்கிய ஜீன்ஸ் பேண்ட்களுக்கு பணமும் செலுத்தவில்லை.

இது குறித்து கடை ஊழியர்கள் கேட்டபோது, போதை இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி, கடையில் வியாபாரம் செய்த மொத்த பணத்தையும் மாமுலாக கொடு என்று மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள மற்ற கடைகளை சேர்ந்த வியாபாரிகளும் ஒன்று திரண்டு, அந்த இளைஞரை அடித்து பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது அந்த இளைஞர் தப்பி ஓடவே, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து விரட்டிச் சென்று இளைஞரை வியாபாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பின்னர் ராயபுரம் போலீசாருக்கு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மாமூல் கேட்டு மிரட்டிய இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த சஞ்சய் என்ற 23 வயது இளைஞன் என்பதும், அவர் மீது ஏற்கனவே நான்கு அடிதடி வழக்குகள் நிலவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.