திருவண்ணாமலை கிரிவலம்!! லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!!
திருவண்ணாமலை என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அருணாசலேஸ்வரர் கோவில் தான். இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
அந்த வகையில், இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 3.20 அளவில் தொடங்கி இன்று அதிகாலை ஒரு மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது.
நேற்று முதல் திருவண்ணமலையில் சுமார் பதிமூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு கிரிவலம் சென்றடைந்தைனர். கிரிவலத்திற்கான பாதை மொத்தம் பதினான்கு மீட்டர் அமைந்துள்ளது.
இந்த கிரிவல பாதை முழுவதும் பக்தர்களின் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. மேலும், அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
நேற்று அதிகாலை இரவு பதினொரு மணி முதல் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து வந்ததால் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் மிகுந்து காணப்பட்டதால் பக்தர்கள் சும்மார் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.
தரிசனம் செய்த பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர். இம்மாநிலம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
இங்கு பவுர்ணமி நாட்களில் மட்டும் இல்லாமல் மற்ற நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், கூடுதலான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.