துரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா!

Photo of author

By Kowsalya

 ஐந்து பாண்டவர்களை பற்றி நாம் அனைவரும் தெரிந்த கதையே. ஆனால் துரியோதனின் மனைவி பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

 

துரியோதனின் மனைவி பானுமதி. அவர் கலிங்க நாட்டு அரசின் புதல்வி. மிகச் சிறந்த சிவபக்தை.

 

இளவரசி பானுமதிக்கு சுய வரம் நடத்த கலிங்க நாட்டு அரசர் அனைவரையும் அழைத்து இருந்தார். அப்பொழுது பஞ்சபாண்டவர்கள் இருந்த குடிசை முழுவதும் எரிந்த சமயம் அது. அதனால் சகுனி சூழ்ச்சி செய்து துரியோதனனை அனுப்பி வைத்தார்.

 

துரியோதனனும் அவனுடன் ஒருவரும் கலிங்க நாட்டு அரசவைக்கு சென்றனர்.  அங்கு அவருக்கு தந்த வரவேற்பு பார்த்த துரியோதனன் மிகவும் அதிர்ச்சி உற்றார். இவ்வளவு பெருமையை பெற்றவரா பானுமதி இத்தனை நாட்டு அரசர்கள் படை சூழ்ந்து வந்திருக்கின்றனர் என்று ஆச்சரியப்பட்டார்.

 

இந்த சுய வர சங்கு முழங்க சுயம்வரத்தில் விதிமுறைகள் சொல்லப்பட்டது. இளவரசி பானுமதி மாலையுடன் வரும்பொழுது ஒவ்வொரு அரசரின் வீர தீரங்கள் சொல்லப்படும் அப்படி இளவரசிக்கு பிடித்திருந்தால் அவரை தனது கணவனாக ஏற்பார்  என்பது விதி முறை.

 

ஆரவாரம் முழங்க பானுமதி மிக அழகுடன் அரசவையை வந்து சேர்கிறார். பானுமதியின் அழகை பார்த்த அடுத்த கணமே துரியோதனுக்கு காதல் ஏற்படுகிறது. ஒவ்வொரு மன்னர்களாக அவரது வீர தீரங்களை சொல்லும் பொழுது பானுமதி யாருக்கும் மாலையிடாமல் வந்து கொண்டிருக்கிறார்.

 

துரியோதனனை நெருங்க நெருங்க துரியோதனனுக்கு மனதெல்லாம் பூ பூத்து கொண்டிருக்கிறது. அதேபோல் பானுமதி துரியோதனிடம் முன் நின்றாள். அவரின் வீர திறமைகள் சொல்லும் பொழுது பானுமதி அவரை மதிக்காமல் திரும்பி விடுகிறார்.

 

அதை பார்த்த துரியோதனுக்கு மிகவும் கோபம்முற்று இவள் திமிரை அடக்க வேண்டும் என்று இவளை வலு கட்டாயமாக இழுத்து சென்று இவளை மணக்க வேண்டுமென்று என எண்ணினார்.

 

உடனே வலுக்கட்டாயமாக பானுமதியின் கையைப் பிடித்து பிடித்துக் கொண்டு செல்கிறார். 56 நாட்டு அரச மன்னர்களும் துரியோதனனை எதிர்த்து போராடுகின்றனர். துரியோதனன் தனது கஜாயத்தை எடுத்து அடிக்கிறார் தரை இரண்டாக பிளக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் தள்ளி நிற்கின்றனர். பானுமதியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார் துரியோதனன். துரியோதனனின் இத்தகைய வீரத்தன்மையை பார்த்த பானுமதி அவன்  பின்னாடி செல்கிறார்.

 

பின் அனைத்து நாட்டு இளவரசர்களையும் மன்னர்களையும் வீரத்தால் போராடி வாசலுக்கு பானுமதியை அழைத்துச் செல்கிறார். இப்பொழுது துரியோதனா என்ற குரல் கேட்க திரும்பிப் பார்க்கும் பொழுது கலிங்க நாட்டு மன்னர்கள் கையில் வில் ஏந்தி நிற்கின்றனர். வில் ஏந்தி விடும் பொழுது ஒரு மாவீரன் அவன் முன் நின்று அனைத்து வில்களையும் நெஞ்சில் வாங்கிக் கொள்கிறான். அவன் மீது பட்ட அம்புகள் பொடி பொடியாக்கி கீழே விழுகின்றது. அது யாரும் இல்லை நமது கர்ணன்.

நீ செல் துரியோதனா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனைவரையும் சமாளிக்கிறார் கர்ணன்.

 

இந்த விஷயம் பீஷ்மருக்கு போக பீஷ்மரும் மிகவும் கடும் கோபத்துடன் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை இழுத்து கொண்டு வருவது நியாயம் அல்ல என்று துரியோதனனிடம் சொல்கிறார் . அவன் பீஷ்மர் அருகே சென்று நீங்கள் அம்பிகை அம்பாலிகாக்கச் செய்ததை நினைவு கொள்ளுங்கள் என சொன்னதும் பீஷ்மர் அமைதியாகி விடுகிறார்.

 

என்னதான் அவள் மீது காதல் கொண்டிருந்தாலும் தன்னை அவமானப்படுத்தியதால் பானுமதியை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் துரியோதனன்.

 

ஆனால் அவன் தேர் ஏறிய கணத்திலிருந்து பானுமதிக்கு துரியோதனன் மீது காதல் வந்துவிடுகிறது. இதனால் அவனின் காதலை பெற பானுமதி மிகவும் ஏங்கி தவிக்கிறாள்.

 

அப்படி தவமிருந்து ஒரு முனிவரை சந்தித்து தனது கணவர் தன் மீது காதல் வயப்பட வேண்டும் என்று அந்த முனிவரிடம் கேட்க அந்த முனிவர் ஒரு வேரை கொடுத்து இந்த வேரை பாலில் கலந்து உனது கணவனுக்கு தா அதன் பிறகு உன் கணவன் உன் மீது மிகுந்த அன்புடன் இருப்பான் என்று அந்த முனிவர் கூறுகிறார்.

 

பௌர்ணமி அன்று பாலில் அந்த வேரை கலந்து துரியோதனக்காக காத்திருக்கிறாள் பானுமதி, அங்கு வந்த துரியோதனனும் பானுமதி மீது இருக்கின்ற கோபத்தால் அந்த பாலை தட்டி விடுகிறார்.

 

இந்தப் பாலை தட்டி விடவே அங்கு வந்த தக்ஷகன் அந்த பாலை அருந்தி விடுகிறார். பானுமதி மீது இவருக்கு காதல் வந்து விடுகிறது.

 

உடனடியாக தனது சுய ரூபத்தை காட்டி பானுமதி இடம் நான் உன் மீது காதல் கொண்டிருக்கிறேன். என்னுடன் வா!  நீ தான் என்னை காதல் பட வைத்து அழைத்தாய் என்று அவர் சொல்ல உடனடியாக பானுமதி திகைத்து நிற்கிறாள்.

 

 பானுமதி மீது கோபம் இருந்தாலும் துரியோதனனுக்கு பானுமதியின் கற்பு தன்மையை பற்றி நன்கு தெரியும் அப்பொழுதுதான் உணர்கிறார் அந்த பாலில் என்ன கலந்தது என்று.

 

உடனே இருவரும் தக்ஷகன் காலில் விழுந்து இது போல தான் நடந்தது பானுமதியின் கற்புக்கு எந்த ஒரு பங்கமும் விளைவிக்காதீர்கள் என்று வணங்கினர்.

 

தக்ஷனும் பானுமதியை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார். மேலும் ஒரு நிபந்தனை விதித்தார், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் துரியோதனன் மற்றும் பானுமதியும் இருவரும் ஒன்றாக வந்து புற்றுக்கு பால் ஊற்றி வணங்க வேண்டும் என்று தக்ஷன் சொல்லி மறைந்துள்ளார்.

 

தக்ஷகன் பானுமதி துரியோதனன் மூன்று பேரை தவிர இது வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் பாஞ்சாலியை துரியோதனன் அவமானப்படுத்தும் பொழுது கிருஷ்ணன் சொல்லி பாஞ்சாலி துரியோதனனின் வாயை அடக்க தக்ஷகன் பேரை உபயோகித்தால் என்று சொல்லப்படுகிறது.