துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

0
188

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உஷாராக இருக்க வேண்டிய நாள். பேசும் வார்த்தைகளிலும் வாகனப் பயணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளில் பிரச்சினை வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே சண்டைகள் வரும் என்பதாலும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகும். தொழில் சம்பந்தமாக இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் குழப்பமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!
Next articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here