விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

0
277

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். கலஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மகிழ்ச்சி குறைவில்லாமல் வந்து சேரும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதி அற்புதமாக காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான அறிகுறிகள் தோன்றும். தொழில் மற்றும் வியாபாரம் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் அருமையாக செயல்படும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் சந்தோஷமான சூழ்நிலையில் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் சென்றவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!
Next articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here