தேனி சிறுமி உயிரிழப்பு: 10 லட்சம் இழப்பீடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்வீட் !
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி என்ற பகுதியில் பூங்கா வைப்பதற்காக பேரூராட்சியானது 7 அடி பள்ளத்தை ஆங்காங்கே தோண்டி வைத்துள்ளது. தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் அப்பல்லம் மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக உள்ளது. இந்நிலையில் பகுதியில் விடுமுறை தினத்தை கழிக்க சிறுமி அவரது தாயுடன் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லை. இயற்கை உபாதை கழிக்க சென்று சிறுமி எதிர்பாராத விதமாக பேரூராட்சி தோண்டி வைத்த பள்ளத்தில் விழுந்துள்ளார். பலத்த காயம் ஏற்பட்டு அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
இச்சிறுமி இறந்ததை மறைக்க பேரூராட்சி அவசர அவசரமாக அவரது உடலை அடக்கம் செய்துள்ளது. மேலும் அப்பகுதியில் அங்கன்வாடிகள் இருப்பதாலும் பிள்ளைகள் தினசரி விளையாடி வருவதாலும் அவர்களும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழ நேரிடலாம் என அங்குள்ள பொதுமக்கள் கூறி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தேவையற்ற பள்ளங்களை மூட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பேரூராட்சியின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என எதிர் கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் அவர்கள் ட்விட்டரில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.ஆனால் தற்போது வரை அரசாங்கம் மௌனம் காத்தே வருகிறது.