தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! மாணவர்கள் ஆர்வம்!
கடந்த இரண்டு ஆண்டு காலமாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து தேர்வு எழுதி இருந்த நிலையில்,நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று முறைபடி பாடங்கள் அனைத்தும் கற்று பொது தேர்வு எழுதினார்கள்.அனைவரும் எதிர்பார்க்கும் விதமாக இந்த தேர்வு முடிவுகள் வரும் என நம்பப் படுகிறது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வதுடன் உள்ளனர்.மதிப்பெண் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்பில் எந்த குரூப் எடுக்கலாம் என்றும், மாணவர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருகிறார்கள்.மாணவர்கள்ளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடிப்படையில் இந்த பத்தாம் வகுப்பு மதிப்பெண் அமைய உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் மிகுந்த கவனத்துடன் தேர்வு எழுதி உள்ளனர்.மாணவர்கள் மட்டும் இன்றி மாணவர்களின் குடுபத்தினரும் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.தேர்வு மதிப்பெண்கள் இணையதில் பதிவு செய்யும் பணி முடிவுக்கு வந்தது எனவும் தேர்வு துறையினர் கூறுகிறார்கள்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் ,தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் சென்ற மாதம் பொது தேர்வானது நடைபெற்றது. அதில் 9 லட்ச மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். மொத்தமாக 45 லட்சக்கணக்கான விடைதாள்கள் கடந்த ஒன்பது நாட்களாக திருத்தம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முடிவடைந்தது.நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.