நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை!

0
176
Suspicious husband on behavior! Wife's pathetic condition!
Suspicious husband on behavior! Wife's pathetic condition!

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை!

சென்னையில், கிண்டி லேபர் காலனியில், லயன்ஸ் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர், நித்யானந்தன். 34 வயதான இவர் லோடு வேன் ட்ரைவராக சென்று கொண்டு உள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் புவனேஸ்வரி தனது அக்காவின் கணவருடன் அதாவது அவரது மாமாவிடம் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதனால் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக அவருடன் பேசுவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார். ஆனால் புவனேஸ்வரியோ அதை கேட்காமல் தொடர்ந்து செல்போனில் பேசியபடி இருந்ததாக தெரிகிறது. அதனால் அதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் தான் சொல்லியும் கேட்காமல் புவனேஸ்வரி, செல்போனில் பேசியதை கண்டு ஆத்திரமடைந்த நித்யானந்தன் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தும், பலமுறை சரமாரியாகக் குத்தியும் கொலை செய்துள்ளார். பின்னர் தனது மச்சானுக்கு போன் செய்து உனது தந்தையை கொன்று விட்டேன் என்று சொல்லிவிட்டு கிண்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மச்சான் கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையான புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். புவனேஸ்வரியின் அண்ணனும், நித்யானந்தரும் நண்பர்கள் தனது தங்கையை பெண் கேட்டதால் நண்பருக்கு கட்டி வைத்துள்ளார்.

இருப்பினும் ஏழு மாத திருமண வாழ்க்கை கணவனுக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தின் காரணமாக  இந்த மணவாழ்க்கை கொலையில் முடிந்துள்ளது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக கிண்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நித்யானந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Previous articleசீனா இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்! எச்சரித்த அமெரிக்கா!
Next articleசென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here