2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது மதுபானி கலையையும், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவி திறமையையும் போற்றும் வகையில் உடுப்பு உடுத்தி வந்துள்ளார். நேற்று ஜனாதிபதியின் உரையுடன் இந்தக் கூட்டம் தொடங்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையை தொடங்கி இருந்தார். தற்சமயம் இன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இவர் எட்டாவது முறையாக இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பிக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் அமலியில் ஈடுபட்டு அவையை விட்டு வெளியேறி உள்ளனர்.
அதை பொறுப்பெடுத்தது அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இளைஞர்கள் முன்னேற்றம், வேளாண்மை, வறுமை ஒழிப்பு, உணவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாடு, வரிவிதிப்பு, நிதி மேலாண்மை, கனிம வளம், ஒழுங்குமுறை மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் சீரமைப்பிற்காக பட்ஜெட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நம் பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
உலகில் பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா திகழ்கின்றது. நாட்டின் அனைத்து பகுதிகளையும் மையமாகக் கொண்டு அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வேளாண்மை துறையை வைத்து 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். நாட்டின் முக்கிய துறை விவசாயம் மற்றும் பருப்பு கொள்முதலில் ஆறு ஆண்டுகளில் தன்னிறைவு அடைவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான உற்சவரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.