நமக்கு சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எளிமையான வைத்தியமுறை இதோ! 

Photo of author

By Divya

நமக்கு சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எளிமையான வைத்தியமுறை இதோ!
நம்முடைய கை, கால், இடுப்பு, கழுத்து, தோல் ஆகிய பகுதிகளில் ஒரு சில சமயங்களில் சுளுக்கு ஏற்படும். இந்த சுளுக்கை சரி செய்ய அனைவரும் சுளுக்கு பேண்டேஜ் வாங்கி சுளுக்கு ஏற்பட்டிருக்கும் இடத்தில் ஒட்டுவார்கள்.
இவ்வாறு ஒட்டும் பொழுது சுளுக்கு சரியாகி விடும். மேலும் சுளுக்கு சரியாக தனியாக மாத்திரைகளும் இருக்கின்றது. அதைவிட இயற்கையான முறையில் சுளுக்கை சில நிமிடங்களில் சரி செய்யலாம். அது என்ன வைத்தியமுறை என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* கற்பூரம்
* மிளகு
செய்முறை…
முதலில் மிளகை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொண்டு அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் இதில் கற்பூரத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அனைத்து விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் காட்டன் துணி ஒன்றை எடுத்து அந்த துணியை நாம் மிளகுத் தூளும் கற்பூரமும் சேர்த்து கொதிக்க வைத்துள்ள தண்ணீரில் நினைக்க வேண்டும். பின்னர் இந்த துணியை சுளுக்கு உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் சுளுக்கு குணமாகி விடும்.