நம்புங்க.. ஒரு ஸ்பூன் மஞ்சள் இருந்தால் சளி இருமலை ஓட ஓட விரட்டி விடலாம்!!

Photo of author

By Divya

நம்புங்க.. ஒரு ஸ்பூன் மஞ்சள் இருந்தால் சளி இருமலை ஓட ஓட விரட்டி விடலாம்!!

மழை,குளிர் காலத்தில் மட்டுமல்ல கொளுத்தி எடுக்கும் வெயில் காலத்திலும் சளி,இருமல் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.காரணம் காலநிலை மாற்றம் தான்.

சளி,இருமல் அனைவருக்கும் ஏற்படக் கூடிய சாதாரண பாதிப்பு தான் என்று அலட்ச்சியம் கொள்ளாமல் விரைவில் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.இல்லையேல் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.

சளி,இருமலை வீட்டு வைத்தியம் மூலம் குணமாக்குவது எப்படி?

*மஞ்சள்
*தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய மஞ்சளை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் சளி,இருமல் பாதிப்பு சில தினங்களில் குணமாகி விடும்.

*மஞ்சள்
*பால்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய மஞ்சளை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் சளி,இருமல் பாதிப்பு சில தினங்களில் குணமாகி விடும்.

*மஞ்சள்
*தேன்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி பருக வேண்டும்.தொடர்ந்து 3 தினங்கள் காலை, இருவேளை பருகி வந்தால் நெஞ்சு சளி,இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

அதேபோல் சூடான நீரில் மஞ்சள் மற்றும் மிளகு தூள் சிறிதளவு சேர்த்து அருந்தி வந்தாலும் சளி,இருமல் பாதிப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும்.