நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 

Photo of author

By Rupa

 நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 

Rupa

 நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 
நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில்  நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.  தீ மளமளவென பற்றி எரிந்து மற்ற கடைகளுக்கும் பரவியது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 10 காய்கறிகடைகளும் அடியோடு எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.