நான் நித்தியானந்தாவை தான் திருமணம் செய்வேன்! அடம்பிடிக்கும் பிரியா ஆனந்த்!

0
341
I will marry Nithyananda! Stunning Priya Anand!
I will marry Nithyananda! Stunning Priya Anand!

நான் நித்தியானந்தாவை தான் திருமணம் செய்வேன்! அடம்பிடிக்கும் பிரியா ஆனந்த்!

சில வருடங்களுக்கு முன்பு மனித வடிவில் இருக்கும் சாமியார்களை தான் நிஜ கடவுளாக மக்கள் பூஜித்தனர். படிப்படியாக அவர்கள் மேலிருந்த நம்பிக்கை அனைத்தும் குறைந்து பல பகிர் உண்மைகள் வெளிவந்தது. அந்த வரிசை பட்டியலில் நித்தியானந்தாவும் ஒன்று. முதலில் இவரை கடவுளின் மறு உருவமாகவே மக்கள் அனைவரும் போற்றினர். நாளடைவில் இவர் நடிகை ரஞ்சிதாவுடன் தனியார் விடுதியில் உல்லாசமாக இருந்ததை மறைமுகமாக கேமரா வைத்து எடுத்த பதிவு தமிழ்நாட்டையே உலுக்கியது. பிறகு பல வழக்குகளில் சிக்கி வெளியே வந்தார்.அவ்வாறு வெளியே வந்து கைலாஷ் என்ற ஓர் தீவை உருவாக்கி தனது பக்தர்களுடன் இருந்து வருகிறார்.

தற்பொழுதும் இவருடன் அந்த கைலாஷ் என்ற தீவில் பல பக்த கோடிகள் இவரை நம்பி உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இவரை உடலில் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டதாகவும் இவர் கோமா நிலைக்கு சென்று இறந்து விட்டதாகவும் பல தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக தனக்கு எதுவும் ஆகவில்லை நான் நன்றாக உள்ளேன் என நித்தியானந்தா பதில் கூறினார். இவர் நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததையே மக்கள் பெரிதும் ஏற்காத போது இவருக்கு போட்டியாக தற்பொழுது பிரியா ஆனந்த் களத்தில் இறங்கியுள்ளார்.

சமூக வலைத்தள பக்கத்தில் நித்தியானந்தா குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். பிரியா ஆனந்துக்கு நித்தியானந்தா என்றாலே மிகவும் பிடிக்குமாம். அவர் மேல் கிரஷ் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு நித்தியானந்தாவை திருமணம் செய்து கொண்டார் தனது பெயரை மாற்றக்கூட தேவை இல்லை பிரியா ஆனந்த் நித்திய ஆனந்த் என்று ஈசியாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளார். மேலும் நித்தியானந்தாவை சுற்றி ஏதோ ஒரு சக்தி உள்ளது அதனால் தான் அவரை சுற்றி இத்தனை பேர் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். பிரியா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு வைரலாக பரவி வருகிறது.

Previous articleஅஜித்தின் பிரஸ் மீட் ! வைரலாகும் வீடியோ!
Next articleமிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா?