அஜித்தின் பிரஸ் மீட் ! வைரலாகும் வீடியோ!

0
143
Ajith's press meet! Viral video!
Ajith's press meet! Viral video!

அஜித்தின் பிரஸ் மீட் ! வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.அதன்படி கடைசியாக அஜீத் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் நிறைய விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

மேலும் அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங்கிற்கு ப்ரேக் விட்டுள்ள நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஃபக் ரைடிங் செய்து புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் பொதுவாக அவரின் திரைப்படங்களின் ப்ரோமோஷன்-ல் கலந்து கொள்ளவதை தவிர்த்து விடுவார். மேலும் கடைசியாக அவரின் திரைப்பட நிகழ்ச்சிகாக கலந்து கொண்டது எப்போது என்றால் பில்லா திரைப்படத்தின் போது தான்.கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியானது பில்லா, ரீமேக்காக உருவானாலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து.

மேலும் அப்போது அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா படக்குழு பிரஸ் மீட் நடத்தியுள்ளது, அதில் கலந்து கொண்ட அஜித் பில்லா திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் கடைசியாக தனது திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டது அதுவே கடைசி என கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களிடையே பரவி வருகிறது. மேலும் ஏ கே 61 படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

author avatar
Parthipan K