உடல் சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.ஆனால் இக்காலத்தில் வளரும் குழந்தைகளே மந்தமாக தான் உள்ளனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையே முக்கிய காரணங்களாகும்.
உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க ஐந்து பொருட்களை கொண்ட ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரித்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.
தேவையான பொருட்கள்:
*நிலக்கடலை – 50 கிராம்
*முழு கோதுமை – 50 கிராம்
*பார்லி – 25 கிராம்
*வால்நட் – கால் கப்
*முழு கடலை – 25 கிராம்
*தேங்காய் துண்டுகள் – அரை கப்
*கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் குறிப்பிட்டுள்ள பொருட்களை குறிப்பிட்டுள்ள அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுக்க வேண்டும்.இதற்கு அடுப்பில் வாணலி வைத்து 50 கிராம் நிலக்கடலை போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.பிறகு 50 கிராம் முழு கோதுமையை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் முழு கடலை,பார்லி,வால்நட் போன்றவற்றை தனித் தனியாக வறுத்து நன்கு ஆறவிட வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
பிறகு அரை கப் அளவிற்கு தேங்காய் துண்டுகள் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த தேங்காய் பாலை ஊற்றி குறைவான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள ஹெல்த் மிக்ஸ் பொடி ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் பாலில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து தேவையான அளவு கற்கண்டு சேர்த்து பருக வேண்டும்.
இந்த பானம் உடல் சோர்வை போக்கி சுறுசுறுப்பாக இருக்க பெரிதும் உதவுகிறது.வயதானவர்கள் இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் மூட்டு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.