ஒரு நபர் தன்னுடைய பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கியானது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, வங்கி பயனரின் உடைய வங்கி கணக்குகளில் தவறான செயல்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்படும் பொழுது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆர் பி ஐ எச்சரிக்கை விடுத்து இருக்கிறது முடியவில்லை என்றால் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளில் கூட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய தேவையற்ற கணக்குகளை மூடுவது நல்லது என்றும் அவர்களுடைய பெயரில் இருக்கக்கூடிய அனைத்து வங்கி கணக்குகளும் செயல்படுத்தப்படவில்லை என்றால் அவற்றை முறையாக மூடிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பிழையான பரிவர்த்தனைகள் நடக்காத படி கவனமாக இருத்தல் வேண்டும் என்றும் ஒருவேளை தவறான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோருடைய பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகள் ஆனது சமீப காலங்களாக மோசடி நபர்களால் கைப்பற்றப்பட்டு பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை தடுப்பதற்கு வங்கி பயணங்கள் தங்களுடைய தேவையற்ற வங்கி கணக்குகளை முறையாக வங்கிகளுக்கு சென்று மூட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.