பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!!

Photo of author

By Rupa

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!!

நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தனித்து நிற்குமா என்ற கேள்வி பெரும் வாரியாக எழுந்துள்ளது.

சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். இதனால் கொந்தளித்த அதிமுக நிர்வாகிகள் மேலிடம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்டாயம் உறவை முறித்துக் கொள்வோம் என்று பகிரங்க அறிவிப்பை வெளியிட்டது.

அது மட்டுமின்றி அண்ணாமலை மேலிடத்திற்கு எதிராகவே பலமுறை நடந்து கொள்வதால் கூட்டணி கட்சிகளுக்கு எப்பொழுதும் இது சிக்கலாகவே அமைகிறது.அந்த வகையில் பாஜக கட்சியில் இருந்த பல மாற்றுக் கட்சியில் சேர்ந்து வருவது ஒரு பக்கம் இருக்கும் பட்சத்தில் செல்வாக்கான நபர்கள் மாற்றுக் கட்சியில் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகள் போன்றோரை தங்கள் பக்கம் இழுக்க கொக்கி போட்டு வருகிறது.

இதில் அதிமுக எம்பி மைத்ரேயன் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் அடுத்ததாக கண்ணதாசன் மகன் மற்றும் நடிகருமான அண்ணாதுரை அவர்கள் பாஜகவில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்துள்ளார்.

முன்னதாகவே திரை பிரபலங்கள் பலர் பாஜகவில் இருந்து வெளிநடப்பு செய்ததையொட்டி மேற்கொண்டு பிரபலங்களை இணைத்து வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனித்துப் போட்டியிட நேர்ந்தால் கட்டாயம் பிரபலங்கள் மற்றும் செல்வாக்கான நபர்களின் ஆதரவு தேவை என்பதால் பலரை அண்ணாமலை டார்கெட் செய்துள்ளதாக கூறுகின்றனர்.