பாலியல் தொல்லை கொடுத்ததால் பேராசிரியர் சிறையிலடைப்பு !!

0
175

பாலியல் தொல்லை கொடுத்ததால் பேராசிரியர் சிறையிலடைப்பு !!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் அரசு கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் சேர்ந்த ரமேஷ் என்பவர் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில காலமாக மாணவியிடம் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறி அவரை கல்லூரிக்கு வரவழைத்துள்ளார்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு கல்லூரிக்கு ஆர்வமுடன் சென்ற மாணவி ,கல்லூரி யாரும் இல்லை என்று தெரிய வந்தது.பிறகு அந்த மாணவியை தனியாக ஒரு வகுப்பறைக்கு அழைத்துச் சென்று உதவி பேராசிரியர், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனை மாணவி எதிர்த்த போதும் வலுக்கட்டாயமாக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் இருந்து தப்பிய மாணவி வீட்டிற்கு சென்று தனது பெற்றோர்களிடம் உதவிபேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் .மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உதவிப்பேராசிரியர் ரமேஷ் என்பவரை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்:

விசாரணையின்போது பேராசிரியர் ரமேஷ் மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்ததும், காதலிக்குமாறு செல்போனில் மிரட்டியதும் தெரியவந்தது.ஆனால் மாணவி படிப்பில் நாட்டம் உள்ளதா இதனை ஏ மறுத்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.தற்பொழுது காதலிக்க மறுத்த பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையில் உள்ளார்.

Previous articleவிராட் கோலிக்கு இன்னும் இத்தனை சதங்கல்தான் உள்ளன
Next article“உயிரிலே கலந்தது” படத்தில் வருவதைப் போல ‘தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டேன்! 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது அக்கா’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here