பாலியல் நடந்த நிமிடங்களை கணக்கிட்டு தண்டனையை குறைத்த நீதிபதி! உச்சகட்ட கொந்தளிப்பில் பெண்கள்!

Photo of author

By Rupa

பாலியல் நடந்த நிமிடங்களை கணக்கிட்டு தண்டனையை குறைத்த நீதிபதி! உச்சகட்ட கொந்தளிப்பில் பெண்கள்!

அனைத்து நாடுகளும் தற்போது பெருமளவு வளர்ந்து வருகிறது அதில் தொழில்நுட்பம் சம்பந்தமாகவும் அனைத்து நாடுகளும் ஒருபடி முன்னேறி தான் வருகின்றது.ஆனால் ஆரம்பகட்ட காலத்திலிருந்தே இருந்து வந்த சில பிரச்சனைகள் இன்றளவும் சரியான தீர்வு கொடுக்கப்படாமல் தான் உள்ளது.அந்த வகையில் அனைத்து நாடுகளிலும் ஒருமித்த பிரச்சனையாக இருப்பது பாலியல் வன்கொடுமை.சிறிய குழந்தை முதல் பெரிய முதியோர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு பலியாகின்றனர்.அந்த வகையில் சுவிஸர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்மணிக்கு ஏற்பட்ட விபரீதம் அனைவரையும் கோபமுற செய்கிறது.

சுவிஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணியை பதினேழு வயது ஆண் மற்றும் அவர்களது நண்பர்கள் ஒரு விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தப் பெண்மணி இவர்கள் செய்த பாலியல் வன்கொடுமையை போலீசாரிடம் தெரிவித்தார்.அதனையடுத்து இந்த வழக்கானது நீதிபதி முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.நீதிபதி கூறிய முடிவுதான் அனைத்துப் பெண்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. ஏனென்றால் அந்த நீதிபதி கூறிய முடிவானது அனைவரையும் போராட்டத்தை நோக்கி செல்ல வைத்துள்ளது.அந்த நீதிபத்தி முடிவானது, இந்த பாலியல் வன்கொடுமையானது வெறும்  11 நிமிடங்கள் மட்டுமே நடந்து உள்ளது.அதிக நேரம் ஏதும் நடக்கவில்லை.

அதனால் குற்றவாளிகளுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையை குறைத்து தீர்ப்பளித்தார்.மேலும் அந்தப் பெண் நீதிபதி கூறியது, இந்த பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு முன் அந்தப் பெண் தூண்டுதல் விட்டதாகவும் அதனால் அந்த ஆண்கள் அந்த பெண்ணை பாலியல் தொல்லை செய்ததாகவும்  நீதிபதி கூறினார்.இவர் இவ்வாறு கூறியது அந்நாட்டு பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவ்வாறு நீதி வழங்கிய நீதிபதியும் ஒரு பெண் தான் என்பது தான் அனைவரையும் வியப்படையச் செய்தது.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டே மற்றொரு பெண்ணின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் தீர்ப்பளித்த்தால் தான்  அந்நாட்டில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.அதேபோல அந்நாட்டின் பெண்கள் வெறும் 11 நிமிடம் என்று கணக்கிட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததை நீங்கள் எவ்வாறு சொல்லலாம் என்று கூறி  பலகைகள் ஏந்தி நீதி வழங்கிய நீதிபதிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.அதேபோல பெண்ணின் வழக்கறிஞரும்  நீதிமன்றம் இவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.