பிரபல நடிகை சோப்பு விற்ற சோகம்! கண்கலங்கிய காட்சி!!

Photo of author

By Rupa

பிரபல நடிகை சோப்பு விற்ற சோகம்! கண்கலங்கிய காட்சி!!

திரையுலகில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் ஏழ்மையில் வாடிய நடிகை ஐஸ்வரியா.90களில் முன்னணி ஹீரோயினி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்.இந்த கால கட்டத்தில் திரையுலகில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. யூடியூப் சேனலில் சமையல் செய்துஒளி பரப்பி செய்திருந்தார்.காலம் செல்ல செல்ல அதிலும் வருமானம் கிடைக்காததால் தெரு தெருவாக சோப்பு விற்று குடும்பத்தை பார்த்து கொண்டேன் என்று  கண்ணீர் விட்டு கூறினார்.ஒரு வேலை சாப்பாட்டுக்காக அவர் சோப்பு விற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

பழம்பெரும் நடிகை லட்சுமி மகளும்,நடிகையுமான ஐஸ்வரியா தன்அம்மாவை போலவே திரையுலகில் வந்தார்.1989 ஆம்ஆண்டு தெலுங்கு திரைப்படம் மூலமாக அறிமுகம் ஆனார்.மலையாள படங்களை தேர்வு செய்து நடித்த இவரை தமிழில் நியாயங்கள் ஜெய்க்கும் படத்தின் மூலம் இயக்குனர் சிவச்சந்திரன்  அறிமுகம்படுத்தினார்.பாக்யராஜிக்கு ஜோடியாக நடித்த ராசுகுட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.இவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியே அடைந்தது.ரஜினிகாந்திற்கு ஜோடியாக எஜமான் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் பெரும் வாரியான வசூலை கொட்டிகுவித்தது

எஜமான் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் மலையாளம் தெலுங்கு எனபல மொழிகளில் நடித்த இவர் குணசித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார்.சூர்யா நடிப்பில் வெளியான ஆறு என்ற திரைப்படத்தில் கனகச்சிதமாக நடித்தார் ஐஸ்வர்யா.குமரன்,சன்ஆப் மகாலஷ்மி,அபியும் நானும்,என படங்களிலும் தென்றல்  என தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.மேலும் யூட்டிப் சேனலில் சௌண்டு சரோஜா என சமையல் செய்து ஒளிபரப்பி வந்தார். யூட்டிப் சேனலில் பேட்டி அளித்த இவர் தற்போது எந்த சினிமா வாய்ப்பும் இல்லாததால் சோப்பு விற்று வருகிறேன் என்றார்.இந்த வேலை எனக்கு மனநிம்மதியை கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.