பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு படை துர்நாற்றம் நீங்க! இதை தடவுங்க!

Photo of author

By Kowsalya

இந்த குறிப்பு ஆண்களும் சரி பெண்களும் சரி இரண்டு பேரும் பயன்படுத்தலாம். எப்பொழுதுமே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுகின்றதா? அல்லது துர்நாற்றம் வீசுகிறதா? இதை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக மாற்றத்தை உணர்வீர்கள்.

தேவையான பொருட்கள்:

1. தேங்காய் பால் அரை கப்
2. கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன்
3. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

1. நன்கு அரைத்து எடுத்த தேங்காய் உடைய முதல் பாலை எடுத்துக் கொள்ளவும்.
2. அந்த பாலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. ஒரு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. அரை மணி நேரம் நின்று உறவையுங்கள்.
5. அரை மணி நேரம் கழித்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இதனை போட்டு நன்கு வதக்கவும்.
6. நன்கு தேங்காய் பாலில் உள்ள எண்ணெய் பிரிந்து வெளியே வரும் அளவிற்கு நன்கு கலந்து விடவும்.
7. இப்பொழுது இதை நீங்கள் ஒரு கண்டைனரில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
8. இரவு படுக்க போகும் முன் சிறிதளவு எடுத்து பிறப்புறுப்பு முழுவதும் தேய்த்து விட்டு கொள்ளவும்.
9. 1 மணி நேரம் கழித்து பின் கழுவிக் கொள்ளலாம். அல்லது இரவு முழுவதும் நீங்கள் வைத்திருந்து காலை கழுவிக்கொள்ளலாம்.