பெண்கள் ஆண்களிடம் எதை ரசிப்பார்கள்?

0
377
#image_title

ஆண்கள் பெண்களை பார்த்தாலே வட்டமிடும் அளவிற்கு என்னவெல்லாம் ரசிப்பார்கள் என்று தெரியும். அதை நாம் இப்பொழுது கூறத் தேவையில்லை. ஆனால் அது அனைவருக்கும் தெரிந்தது. பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக எதை பார்ப்பார்கள் எதை ரசிப்பார்கள் என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

 

1. முதலில் மிகவும் அழகாக நேர்த்தியாக உடை அணிபவரை பெண்களுக்கு பிடிக்கும்.  மிகவும் அழகாக நேர்த்தியான உடை அணிந்து வரும் ஆண்களை பெண்கள் ரசிப்பார்கள்.

2. எந்த ஆடை அணிந்திருந்தாலும் அந்த ஆணின் நடை மிகவும் கம்பீரமாக இருந்தால் பெண்கள் அதை மறைமுகமாக ரசிப்பார்கள்.

3. ஆண்களின் அகன்ற தோள்கள் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

4. காலையில் ஆண்கள் எழும் பொழுது அரை தூக்கத்தில் அரை கண் திறந்திருக்கும் அல்லவா அந்த அரை தூக்க கண்கள் பெண்களுக்கு பிடிக்குமாம்.

5. பெண்களை ஆண்கள் பார்க்கும் அந்த கடைக்கண் பார்வை மிக அழகாக இருக்குமாம்.

6. ஆண்களிடம் உள்ள அடர்த்தியான புருவம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

7. பெண்களுக்கு ஆண்கள் நகங்களை தூய்மையாக வைத்திருத்தல் மிகவும் பிடிக்குமாம்.

8. ஆண்கள் வெட்கப்படும் பொழுது சிரிக்கும் சிரிப்பு பிடிக்குமாம்.

9. நீண்ட மூக்கு உடையவர்களை பெண்களுக்கு பிடிக்குமாம்.

10. கையில் நரம்பு புடைத்து இருப்பது பிடிக்குமாம்.

11. நடக்கும் பொழுது பறக்கும் முடியை சரி செய்வது பிடிக்குமாம்.

12. ஒரு சில பெண்களுக்கு ஆண்களின் முரட்டு தன்மை கூட பிடிக்குமாம்.

13. பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி முடியை கோதி விடுவது பிடிக்குமாம்.

 

இப்படி எண்ணற்ற வகையில் ஆண்களை பெண்கள் மிகவும் ரசிக்கின்றனர்.

Previous articleநாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!!
Next articleதிருபாய் அம்பானி இன்டர்நேஷனல்! பாலிவுட் நடிகர்களின் குழந்தைகளின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?