பெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு..!

Photo of author

By Janani

பெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு..!

Janani

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தெலுங்கானாவில் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகமெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் கொண்டாட்டடங்கள் கலைகட்டி வருகின்றன. பெண்கள் தினத்தில் அவர்களின் முன்னேற்றம், உரிமைகளை நிலைநாட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தல், திட்டங்கள் உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பணிப்புரியும் அரசு பெண் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் அரசு ஊழியர்களுக்கு 8ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுவதாகவும் இன்று பெண்களுக்கு 750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வ அமைப்பினர் போன்றவற்றிற்று வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பை அம்மாநில பெண்கள் வரவேற்றுள்ளனர்.பெ