“DigitAll: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” – உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது சர்வதேச மகளிர் தினம்..!

0
186
#image_title

உலகமெங்கிலும் மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் மகளிர் தினத்தன்ரு பொது விடுமுறை அளிக்கப்பட்டு மகளிர் தினம் விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. தற்போது உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டாலும் முதன்முதலில் 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க சோஷியலிச கட்சி சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது.

ஆயத்த ஆடை பணியாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து தெரசா மல்கே என்ற தொழிலாளர்ன் நல ஆர்வலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார். அதன்பின், 1975 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் சர்வதேச மகளிர் தினத்தை ஐ.நா. கொண்டாடியதை அடுத்து மார்ச் எட்டாம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது.

பெண்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உலகெங்கிலும் பெண்கள் அமைதியாக வாழுவதற்கு இந்த நாளில் உறுதியேற்க்கப்பட்டது. இதே போல ஒவ்வொரு ஆண்டும் தனிகருப்பொருளை ஐ.நா அறிமுகப்படுத்தியது. இந்தாண்டு DigitAll: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்ற கருப்பொருளில் பெண்கள் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பம் அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதும் அது பெண் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதும் இந்த கருப்பொருளின் நோக்கமாக கருத்தப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் தனது சிறப்பு டூடிலை வெளியிட்டுள்ளது.