பொதுக்கணக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு! ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணியில் அதிமுக பல கோடி மோசடி! 

0
315

பொதுக்கணக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு! ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணியில் அதிமுக பல கோடி மோசடி!

தூத்துக்குடியில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட்சிட்டி திட்டபனிகணிகளை ஆய்வு செய்த சட்டபேரை பொதுக்கணக்கு குழுவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பலகோடி ரூபாய் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினர்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மீன்பிடித்துறைமுகம் ஆகியவைகளை தமிழ்நாடு சட்டமன்ற குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன்,ஜவகர்லா,சிந்தனை செல்வன்,ராஜா,பிரகாஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சுமார்ட்சிட்டி திட்டப்பணிகளின் கீழ் நடைபெறும் பழைய பேருந்து நிலையம் பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்த ஆய்வுக்குழு தரமான செங்கல்கள் மூலம்-தான் கட்டப்படுகின்றதா என்பதை உறுதிபடுத்த அங்கிருந்த செங்கல்லை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.

மேலும் பழைய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் குறித்தான வரைபடங்களையும் ஒப்பந்தகாரரிடம் கேட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் அவர்கள் கூறுகையில் கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உட்பட வேளாண்மைத்துறை, போக்குவரத்துதுறை,கால்நடை மற்றும் மீன்வளத்துறை, மருத்துவத்துறை என பல்வேறு துறைகளில் பலகோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Previous articleவாரிசு படத்தின் புதிய அப்டேட்! விஜய் ரசிகர்கள் உற்சாகம்!
Next articleமேகதாது அணைத் திட்டம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை! காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு என்ன?