போதைபொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளேனா??  பொய்யான செய்தி  என காட்டமான பிக்பாஸ் பிரபலம் !!

Photo of author

By Amutha

போதைபொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளேனா??  பொய்யான செய்தி  என காட்டமான பிக்பாஸ் பிரபலம் !!

Amutha

Have links with drug gangs?? Fake News Bigg Boss Celebrity Information!!

போதைபொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ளேனா??  பொய்யான செய்தி  என காட்டமான பிக்பாஸ் பிரபலம் !! 

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு என வந்த தகவல் பொய்யானது என பிரபல பிக்பாஸ் நடிகை அஷு ரெட்டி கோபமாக கூறியுள்ளார்.

பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி வசம் கோகோயின் போதைபொருள் இருந்ததாக கூறி சில நாட்களுக்கு முன்னர் அவர் தெலுங்கானா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவருடன் தொடர்பு கொண்டவர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சௌத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மற்றும் வேறு சில நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததோடு மட்டுமில்லாமல் அவர்களிடம் அடிக்கடி பேசியுள்ளதும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரித்து சில முக்கிய தகவல்களை பெற்று உள்ளனர். மேலும் அவரது போன் டேட்டா சோதனை செய்யப் பட்டு அதில உள்ள பல பரபரப்பு சம்பவங்கள் வெளியில் கொண்டு வரப்பட்டன.

அதில் அவர் பிக்பாஸ் நடிகை ஒருவரிடம் பேசியதும் தெரிய வந்தது. அவரின் வங்கி பரிவர்த்தனைகள் சோதனை செய்யப்பட்டன. மேலும் அவர் டிவி, திரைப்படம், வணிகத்துறையைச் சேர்ந்த 12க்கும் மேற்ப்பட்ட பிரபலத்துடன் பேசிய ஆதாரங்களையும் சேகரித்தனர்.

அதில் அஷு ரெட்டி, நடிகை ஜோதி, புஷ்பக் கேப்ஸ் உரிமையாளர் ஆகியோருடன் அடிக்கடி பேசி வந்ததும் தெரிய வந்தது. பல பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மகன்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக தெரிய வந்தது.

மேலும் பிக்பாஸ் பிரபலம் அஷு ரெட்டியின் கால்களை சௌத்ரி  வாயில் கடிப்பது போன்ற போட்டோவை டைரக்டர் ராம்கோபால் வர்மா வெளியிட்டு இவரை பிரபலமாக்கினார். இதை அஷு ரெட்டி மறுத்ததுடன் தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப் படுவதாக கூறியுள்ளார்.

மேலும் தன் மீது கூறப்பட்ட போதைபொருள் குற்றச்சாட்டினை மறுத்துள்ள அவர் தனக்கு யாருடனும் எந்தவித தொடர்பும் இல்லையென கூறியுள்ளார். மேலும் அவை அனைத்தும் பொய்யான செய்திகள் என கூறிய அவர் தேவைப்பட்டால் நேரம் வரும் போது சம்பந்தப்பட்டவர்களிடம் உண்மையை விளக்குவேன். அடுத்து தனது தொலைபேசி எண்ணை அனுமதியின்றி பகிரக் கூடாது அதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.